நமக்கு பயனளிக்கிறது என்பதனால் சூரியனையும் சந்திரனையும் நாம் வணங்கலாமா?

நமக்கு பயனளிக்கிறது என்பதனால் சூரியனையும் சந்திரனையும் நாம் வணங்கலாமா?

**************
வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம் வார்த்தைகளும் நடத்தையும் வேறுபடுகின்றன.

உதாரணத்திற்கு மரியாதை, அன்பு, பாசம், சமர்ப்பிப்பித்தல், பாராட்டுதல், போற்றுதல் இப்படி ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் வெவ்வேறு சொற்கள் பயன்படுகின்றன.

நீங்கள் உங்களுடைய பெற்றோர்களை நேசிக்கிறீர்கள், மதிக்கிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்.

நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரரை அல்லது துணிச்சலான ஒருவரின் செயலைப் பாராட்டலாம். ஆனால், அவர்களால் உங்கள் பெற்றோருடைய இடத்திற்கு வர முடியாது. உங்கள் பெற்றோரை நீங்கள் நேசிக்கும் விதத்தில் அவர்களை நேசிக்க முடியாது.

நீங்கள் உங்களுடைய மனைவியை நேசிப்பது போல உங்கள் அண்டை வீட்டாரை நேசிப்பதில்லை.

நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள். கடவுளின் வழிகாட்டுதலின்படிதான் உங்கள் முழு வாழ்க்கையும் இயக்கப்பட வேண்டும்.

கடவுளின் இடத்தில் வேறு ஒருவரை வைக்க முடியாது.

நீங்கள் விலங்குகளிடம் பாசத்தைக் காட்டுகிறீர்கள், இந்த பாசம் உங்கள் பிள்ளைக்கு காட்டுவது போன்றதல்ல.

சூரியன், சந்திரன், வானம், பூமி, அதில் மலைகள், பெருங்கடல்கள், பூக்கள், பறவைகள் - இவற்றின் அழகை நீங்கள் ரசிக்கிறீர்கள், வியக்கிறீர்கள். இவையனைத்தும் மிகச்சிறந்த வடிவமைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான சான்றுகள். அவரைத்தான்  நாம் கடவுள் என்று குறிப்பிடுகிறோம்.

தன்னளவில் சுழண்டுகொண்டே  சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் கொண்ட பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சம் நம் படைப்பாளரின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
எனவே - புகழுக்கு தகுதியானவர் யார்? நாம் வழிபட தகுதியானவர் யார்?
நிச்சயமாக சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என அனைத்தும் படைப்புக்கள், அவற்றின் படைப்பின் பின்னணியில் இருப்பவர் நம் படைப்பாளர்.

நாம் கடவுளை வணங்க வேண்டும், அவரை மிகவும் நேசிக்க வேண்டும், ஏனென்றால் அவர்தான் நமக்கு தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், பறவைகள்,பூக்கள், சந்திரன், நட்சத்திரங்கள் என அனைத்தையும் கொடுத்தார்.

நாம் எடுக்கும் ஒவ்வொரு சுவாசமும் கடவுளிடமிருந்து வந்தவை.
உங்கள் பெற்றோர்களையும், நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் நேசிக்கும்போது, ​​உங்கள் மகழ்ச்சிக்குப் பின்னால்  உண்மையான காரணமாக இருக்கும் படைப்பாளரை ஏற்றுக்கொள்வதற்கும் நேசிப்பதற்கும் நீங்கள் தயாராக இல்லை என்றால் உங்கள் செயலை எப்படி நியாயப்படுத்தமுடியும்??

உண்மையில் நடுநிலையான செயல் எதுவென்றால் சூரியன், சந்திரன், பிரபஞ்சம், இந்த இயற்கை போன்றவற்றை மெச்சுகின்ற அதே நேரத்தில் இவை அனைத்தையும் படைத்த சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு மட்டுமே நம் வழிபாட்டை ஒருமுகப்படுத்தி செய்தலாகும்.

Comments