Posts

Showing posts from August, 2020

நாம் இறைவனை நேசிக்க வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா?

நாம் இறைவனை நேசிக்க வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா? கேள்வி: நாம் இறைவனை நேசிக்க வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா?  கடவுளுக்கு  நாம் கீழ்ப்படிவதற்கு முதல் காரணமாக  இறைவனை குறித்த பயம் இருக்கிறது என்ற கருத்தை ஏற்கிறீர்களா? ************** பதில்: அரபு சொல் "தக்வா", "பயம்" என்று தவறாக மொழிபெயர்க்கப்படுகிறது. "வாவ் காஃப் யா" என்ற மூல சொல் அன்பைக் குறிக்கிறது. இறைவனை விலங்கு, பேய் அல்லது கெட்ட மனிதர்களை கண்டு அஞ்சுவது போல  அஞ்சக்கூடாது. இறைவனை நேசிக்க வேண்டும். ஒருவரின் மீது அன்பு அதிகரிக்கும் போது ஒரு பயம் உருவாகும், ஆனால் இந்த பயம் அச்சுறுத்தலால் உருவாவதல்ல, அதீத அன்பின் காரணமாக உருவாவது. இந்த அன்பு கலந்த பயம் தான் "தக்வா", இதையே தான் குர்ஆனும் போதிக்கிறது. ".... நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்...." குர்ஆன் 2:165  அதே நேரத்தில், குர்ஆன்  அல்லாஹ்வின் மீது பயத்தினையும் விசுவாசிகளுக்கு வலியுறுத்துகிறது. ஆனால் இந்த பயத்திற்கு பயன்படும் வார்த்தை வேறானது. ஒவ்வொரு அரபுமொழி வார்த்தைகளும் ஒவ்வொரு அர்த்தத்தினை க