Posts

Showing posts from November, 2020

இஸ்லாத்தின் பார்வையில் போர்

 இஸ்லாத்தின் பார்வையில் போர் அப்பா தன் மகனிடம் “ஆல்பர்ட்!  விளையாடுவதற்குச் செல்ல வேண்டாம்.  வெளியே மழை பெய்கிறது. ”  ஆல்பர்ட்டின் அப்பா “விளையாடுவதற்கு வெளியே செல்ல வேண்டாம்” என்று கூறியதால், ஆல்பர்ட் எப்போதும் எந்த விளையாட்டையும் விளையாடக்கூடாது. சரிதானே?  வாசகர்களே, எனது தவறான முடிவின் காரணமாக தயவுசெய்து என் மீது கோபப்பட வேண்டாம்.  முழுமையான பின்னணியையும், சூழ்நிலையையும் விளங்காமல் நான் மேற்கோள் காட்டுகிறேன் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டீர்கள். சரியான கருத்து எதுவெனில் - “ஆல்பர்ட்டின் தந்தை மழையில்தான் விளையாட வேண்டாம் என்று கேட்டுள்ளார். ஏனெனில் ஆல்பர்ட்டுக்கு காய்ச்சல் வரக்கூடும்.  சாதாரண நாட்களில் அவர் விளையாடலாம். ” இஸ்லாம் பயங்கரவாதத்தை அல்லது வன்முறையை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்படுவது, மேற்சொன்ன கருத்துடன் சற்றே ஒத்திருக்கிறது. திறந்த மனதுடன் இந்த விஷயத்தைப் பார்ப்போம். அ. இஸ்லாம் என்றால் அமைதி  இஸ்லாம் என்பது கடவுளின் மார்க்கத்தை குறிக்க பயன்படும் அரபுமொழிப் பெயர்.  சர்வவல்லமையுள்ள கடவுள் பல வேதங்களின் மூலம் மனிதனை வழிநடத்தியுள்ளார்.  இந்த தொடரில் குர்ஆன் கடைசியாக இ