Posts

Showing posts from September, 2020

பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யாவின் பார்வையில் கடவுள்

Image
 பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யாவின் பார்வையில் கடவுள் " கடவுள் ஒருவரே; பல கடவுள்கள் இல்லை" பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யா [இந்து மதத்தின் ஒரு பெரிய அதிகாரம் பெற்றவர் மற்றும் காயத்ரி பரிவார் நிறுவனர்] பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யா [இறப்பு :1990] சனாதன்-தர்மி மற்றும் இந்து வேத அறிஞர்களில் சிறந்து விளங்கியவர். ஹரித்வாரைச் சேர்ந்த ஒரு மதச் சார்பு நிறுவனமான காயத்ரி பரிவார் அமைப்பின் நிறுவனர். அவரின் படைப்பான அகந்த ஜோதி இதழில்(காயத்ரி பரிவாரின் அதிகாரப்பூர்வ இதழ்) சில பதிவுகள்  பின்வருமாறு [ ஜூன் 1985 பதிப்பு] ********* "இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர் ஒருவர் மட்டுமே. அவரே, தனது திட்டங்களின்படி அனைத்து மாறுபாடுகளையும் உருவாக்குகிறார், பெருக்குகிறார், ஏற்படுத்துகிறார். அவருக்கென்று எந்த உதவியாளரும் இல்லை. கடவுளின் விஷயத்தில் எல்லா மக்களும் தங்கள் விருப்பங்களை புகுத்துகின்றனர். ஒரே கடவுளின் அரசாங்கம் வெவ்வேறு கடவுள்களுக்கு பிரிக்கப்பட்டுவிட்டதாக கருதுகிறார்கள், பின் மக்கள் தங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குவதாகவும் ஆதரிப்பதாகவும் நினைத்தார்கள். இதோடு மட்டும் நிற்கவில்லை;