Posts

Showing posts from June, 2020

நான் அறிவியலை நம்புகிறேன். எனக்கு ஏன் ஒரு மதமோ அல்லது கடவுளோ தேவை?

நான் அறிவியலை நம்புகிறேன். எனக்கு ஏன் ஒரு மதமோ அல்லது கடவுளோ தேவை? ********* அறிவியல் அல்லது விஞ்ஞானம் என்பதே கடவுளின் சட்டங்களை கண்டுபிடிப்பதுதான். இந்த இயற்கையின் விதிகள் எந்நிலையிலும் மாறாது. இந்தச் சட்டங்களைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாக சிந்திக்கிறோமோ அந்த அளவுக்கு மனிதகுலத்திற்காக சிறந்த விஷயங்களை நம்மால் கொண்டு வரமுடியும். நமது அன்றாட வாழ்க்கையில் அறிவியல் பெரிதும் பயன்படுகிறது. நமது அலாரம் கடிகாரம் முதல் சுகாதார மருந்துகள் வரை - அனைத்தும் அறிவியலயே சார்ந்துள்ளது. அதே நேரத்தில், அறிவியலுக்கும் வரம்புகள் உள்ளன. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அறிவியல் நமக்கு வழிகாட்டும் என்று எதிர்பார்ப்பது பெரும் தவறு. அறிவியலால், நம்மை உணர்வு ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு சிறந்த மனிதனாக மாற்ற முடியாது. அறிவியல் நல்லது கெட்டது பற்றியோ, நெறிமுறைகள் மற்றும் சமூக நடத்தை பற்றியோ பேசவதுவில்லை. பெற்றோருக்குக் கீழ்ப்படிவது,  மனைவியை நேசிப்பது,  குழந்தைகளைப் பராமரிப்பது அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவுவது பற்றியும் அறிவியல் பேசாது. அதுபோல், அறிவியல் ஒருவரின் மனசாட்சியை ஈர்க்காது, மற்றொருவ

நமக்கு பயனளிக்கிறது என்பதனால் சூரியனையும் சந்திரனையும் நாம் வணங்கலாமா?

நமக்கு பயனளிக்கிறது என்பதனால் சூரியனையும் சந்திரனையும் நாம் வணங்கலாமா? ************** வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம் வார்த்தைகளும் நடத்தையும் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு மரியாதை, அன்பு, பாசம், சமர்ப்பிப்பித்தல், பாராட்டுதல், போற்றுதல் இப்படி ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் வெவ்வேறு சொற்கள் பயன்படுகின்றன. நீங்கள் உங்களுடைய பெற்றோர்களை நேசிக்கிறீர்கள், மதிக்கிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள். நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரரை அல்லது துணிச்சலான ஒருவரின் செயலைப் பாராட்டலாம். ஆனால், அவர்களால் உங்கள் பெற்றோருடைய இடத்திற்கு வர முடியாது. உங்கள் பெற்றோரை நீங்கள் நேசிக்கும் விதத்தில் அவர்களை நேசிக்க முடியாது. நீங்கள் உங்களுடைய மனைவியை நேசிப்பது போல உங்கள் அண்டை வீட்டாரை நேசிப்பதில்லை. நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள். கடவுளின் வழிகாட்டுதலின்படிதான் உங்கள் முழு வாழ்க்கையும் இயக்கப்பட வேண்டும். கடவுளின் இடத்தில் வேறு ஒருவரை வைக்க முடியாது. நீங்கள் விலங்குகளிடம் பாசத்தைக் காட்டுகிறீர்கள், இந்த பாசம் உங்கள் பிள்ளைக்கு காட்டுவது போன்றதல்ல. சூரியன், சந்திரன், வானம், பூமி, அதில்