Posts

Showing posts from July, 2020

மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை இல்லையெனில் மனிதநேயம் இருக்குமா?

மரணத்திற்குப்  பின்னுள்ள வாழ்க்கை இல்லையெனில் மனிதநேயம் இருக்குமா? நான் மனிதநேயத்தைதான் நம்புகிறேன், மதத்தினை அல்ல. ******************************* அ. மறுமை வாழ்க்கை (பரலோகம்) மேல்  நம்பிக்கை வைக்காமல் மனிதநேயம் சாத்தியமாகுமா?  நான் மனிதநேயத்தை நம்பக்கூடியவன். எதுக்கு தேவை இல்லாத நம்பிக்கைகள்? முதலில் நல்ல மனிதனாயிருப்போம், மற்றவைகளை அப்புறம் பார்க்கலாம். சொர்க்கம், நரகத்தை பார்த்தவர் யார்? பின்பு ஏன் அவைகளை நம்ப வேண்டும்? மறுமை வாழ்வு/நம்பிக்கைகள்/கடவுள் போன்ற விஷயங்கள் பேச முயலும்போது,  மேல் சொன்ன கேள்விகளை நம்மால் அடிக்கடி கேட்க முடியும். நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை விளக்குவோர் அதன் உண்மைத் தன்மையை உணர வைப்பதில்லை. அதனால் தான் இதுபோன்ற கேள்விகள் பிறக்கின்றன. பகுத்தறிவுள்ளவர்கள், இயற்கையையோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றையோ கடவுளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "நான் மனிதநேயத்தை நம்புகிறேன்" -  இங்கே மனிதநேயம் என்பது எதைக் குறிக்கிறது? எது மனிதாபிமானம், எது மனிதாபிமானமற்ற தன்மை என்பதனை யார் முடிவு செய்கிறார்? அறநெறி, நல்லொழுக்கம் மற்றும் ஒழு