நான் அறிவியலை நம்புகிறேன். எனக்கு ஏன் ஒரு மதமோ அல்லது கடவுளோ தேவை?

நான் அறிவியலை நம்புகிறேன். எனக்கு ஏன் ஒரு மதமோ அல்லது கடவுளோ தேவை?
*********

அறிவியல் அல்லது விஞ்ஞானம் என்பதே கடவுளின் சட்டங்களை கண்டுபிடிப்பதுதான். இந்த இயற்கையின் விதிகள் எந்நிலையிலும் மாறாது. இந்தச் சட்டங்களைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாக சிந்திக்கிறோமோ அந்த அளவுக்கு மனிதகுலத்திற்காக சிறந்த விஷயங்களை நம்மால் கொண்டு வரமுடியும்.

நமது அன்றாட வாழ்க்கையில் அறிவியல் பெரிதும் பயன்படுகிறது. நமது அலாரம் கடிகாரம் முதல் சுகாதார மருந்துகள் வரை - அனைத்தும் அறிவியலயே சார்ந்துள்ளது.

அதே நேரத்தில், அறிவியலுக்கும் வரம்புகள் உள்ளன. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அறிவியல் நமக்கு வழிகாட்டும் என்று எதிர்பார்ப்பது பெரும் தவறு.

அறிவியலால், நம்மை உணர்வு ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு சிறந்த மனிதனாக மாற்ற முடியாது. அறிவியல் நல்லது கெட்டது பற்றியோ, நெறிமுறைகள் மற்றும் சமூக நடத்தை பற்றியோ பேசவதுவில்லை. பெற்றோருக்குக் கீழ்ப்படிவது,  மனைவியை நேசிப்பது,  குழந்தைகளைப் பராமரிப்பது அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவுவது பற்றியும் அறிவியல் பேசாது.

அதுபோல், அறிவியல் ஒருவரின் மனசாட்சியை ஈர்க்காது, மற்றொருவருக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்காது.

மிகவும் மேம்பட்ட அறிவியல் ஆய்வகத்தில் "பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது" பற்றி ஏதும் நெறிமுறைகள் இருக்கலாமே தவிர, ஒழுக்க ரீதியாக சரியான பாலியல் நடத்தை என்ன என்பதை அறிவியல் ஒருபோதும் நமக்குக் கற்பிக்காது!

நமது அன்றாட வாழ்க்கையில் அறிவியல் அல்லது விஞ்ஞானம் பெரிதும் தேவைப்பட்டாலும், அது நமக்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்குவதில்லை, குறிப்பாக

1. நம் வாழ்வின் நோக்கம் என்ன?

2.எந்த செயல்கள் நன்மை பயக்கும், எது தீங்கு விளைவிக்கும்?

3. வறுமை, போதைப் பழக்கம், கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்றவற்றிலிருந்து விடுபட என்ன சட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்?

4. வாழ்க்கையிலும் சமூகத்திலும் 'அமைதியை' அடைவது எப்படி?

இந்த கேள்விகளுக்கு அறிவியல் பதிலளிப்பதில்லை.

 எனவே நமது அறிவின் அடிப்படையாக அறிவியலை விட ஒரு பெரிய களம் நமக்குத் தேவை. அதுதான் 'சர்வவல்லமையுள்ள கடவுளின் வழிகாட்டுதல்'.

மனிதகுலத்தை யார் படைத்தரோ அவரிடமிருந்து நமக்கு வழிகாட்டுதல் தேவை, அவரால் மட்டுமே முழு மனிதகுலத்திற்கும் எது நல்லது, எது கெட்டது என்பதை நன்கு அறிந்தவராகவும், பக்கச்சார்பற்றவராகவும் இருக்கமுடியும்.

கடவுளின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதுதான் கடவுளின் மதம்.

இந்த வழிகாட்டுதல்கள், கடவுளால் உருவாக்கப்பட்ட விதிகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவும், அவற்றை தமக்காகவும் சமூக நலனுக்காகவும் பயன்படுத்தவும் வழிகாட்டுகிறது.

Comments