நாம் இறைவனை நேசிக்க வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா?

நாம் இறைவனை நேசிக்க வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா?

கேள்வி: நாம் இறைவனை நேசிக்க வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா? 

கடவுளுக்கு  நாம் கீழ்ப்படிவதற்கு முதல் காரணமாக  இறைவனை குறித்த பயம் இருக்கிறது என்ற கருத்தை ஏற்கிறீர்களா?

**************
பதில்: அரபு சொல் "தக்வா", "பயம்" என்று தவறாக மொழிபெயர்க்கப்படுகிறது. "வாவ் காஃப் யா" என்ற மூல சொல் அன்பைக் குறிக்கிறது. இறைவனை விலங்கு, பேய் அல்லது கெட்ட மனிதர்களை கண்டு அஞ்சுவது போல  அஞ்சக்கூடாது. இறைவனை நேசிக்க வேண்டும்.

ஒருவரின் மீது அன்பு அதிகரிக்கும் போது ஒரு பயம் உருவாகும், ஆனால் இந்த பயம் அச்சுறுத்தலால் உருவாவதல்ல, அதீத அன்பின் காரணமாக உருவாவது. இந்த அன்பு கலந்த பயம் தான் "தக்வா", இதையே தான் குர்ஆனும் போதிக்கிறது.

".... நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்...." குர்ஆன் 2:165 

அதே நேரத்தில், குர்ஆன்  அல்லாஹ்வின் மீது பயத்தினையும் விசுவாசிகளுக்கு வலியுறுத்துகிறது. ஆனால் இந்த பயத்திற்கு பயன்படும் வார்த்தை வேறானது. ஒவ்வொரு அரபுமொழி வார்த்தைகளும் ஒவ்வொரு அர்த்தத்தினை கொண்டிருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும், ஆனால் அவையாவும் "பயம்" என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. 

ஆகையால், "அல்லாஹ்வின் மீதான பயம்" மற்றும் "பொதுவான பயம்" ஆகியவற்றை எவ்வாறு பிரித்துபார்ப்பது?
அல்லாஹ்வின் மீதான பயம் என்பது மிருகங்கள், நெருப்பு மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்றவைகள் மீது கொண்டிருக்கும் பயத்தினைப் போன்றதல்ல. மாறாக, இந்த பயமானது அல்லாஹ்வின் மீது கொண்டிருக்கும் அதீத அன்பின் காரணமாக உருவாவதாகும்.

நீங்கள் அல்லாஹ்வை மிகவும் நேசிக்கும்போது, ​​ஒரு வகையான "பயம்" உருவாகும். நமது எந்த செயலும் நமக்கு பிரியமான ஒருவரை கோபப்படுத்தும்படி இருந்துவிட கூடாது என்று கவனமாக இருப்போமே அதுபோன்ற பயம் தான் இறையச்சம். இந்த பயம் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து உங்களை பாதுகாக்கும். இஸ்லாமும் இதையே எதிர்பார்க்கிறது.

அல்லாஹ்வின் மீதுள்ள தீவிர அன்பினால் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுவீர்கள்.

குர்ஆன் பயம் சார்ந்த கீழ்ப்படிதலை வலியுறுத்துவதில்லை.  மாறாக குர்ஆனின் அணுகுமுறைகள், படிப்படியாக: 
1. இறைவன் படைத்த - நமக்குள்ளும் நம்மை சுற்றியும் உள்ள அடையாளங்களை சிந்தித்துப் பார்த்தல்.
2. எவரொருவர் இறைவனின் அடையாளங்களை கொண்டு இறைவனை விளங்கிக்கொண்டாரா, அவர் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருப்பார்.
3. கடவுள் நம்பிக்கை என்பது அவன் வகுத்த சட்டங்களை நம்புவதையும் உள்ளடக்குகிறது. குர்ஆன் மற்றும் நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இறைவனின் இந்த சட்டங்கள் பற்றிய அறிவை நமக்கு வழங்குகிறது. 
4. அடுத்தது  நம்பிக்கையை செயல்கள் மூலம் காட்டுவது. நம் செயல்கள் இறைவன் மீதான நம்பிக்கை மற்றும் அன்பைப் பொறுத்து வெளிப்படும். எந்த அளவுக்கு எல்லாம் வல்ல இறைவனை ஒருவர் நேசிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் இறைவனின் கட்டளைகளையும் நிறைவேற்றுவார்.

6. அதிகப்படியான அன்பு ஒரு வகையான பயத்தினை உண்டாக்கும். எங்கே நாம் இறைவனின் நேசத்திலிருந்து விலகிவிடுவோமோ என்கிற பயத்தினால் ஒரு இறை நம்பிக்கையாளர் பாவங்களிலிருந்தும், இறைவனுக்கு கீழ்ப்படிவதை மறுப்பதிலிருந்தும் விலகி இருப்பார். 

சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் பகுத்தறிவு, அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இறைநம்பிக்கையைதான் குர்ஆன் கட்டளையிடுகிறது.

**********************

Comments