பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யாவின் பார்வையில் கடவுள்

 பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யாவின் பார்வையில் கடவுள்


" கடவுள் ஒருவரே; பல கடவுள்கள் இல்லை"


பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யா [இந்து மதத்தின் ஒரு பெரிய அதிகாரம் பெற்றவர் மற்றும் காயத்ரி பரிவார் நிறுவனர்]




பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யா [இறப்பு :1990] சனாதன்-தர்மி மற்றும் இந்து வேத அறிஞர்களில் சிறந்து விளங்கியவர். ஹரித்வாரைச் சேர்ந்த ஒரு மதச் சார்பு நிறுவனமான காயத்ரி பரிவார் அமைப்பின் நிறுவனர். அவரின் படைப்பான அகந்த ஜோதி இதழில்(காயத்ரி பரிவாரின் அதிகாரப்பூர்வ இதழ்) சில பதிவுகள்  பின்வருமாறு [ ஜூன் 1985 பதிப்பு]



*********

"இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர் ஒருவர் மட்டுமே. அவரே, தனது திட்டங்களின்படி அனைத்து மாறுபாடுகளையும் உருவாக்குகிறார், பெருக்குகிறார், ஏற்படுத்துகிறார். அவருக்கென்று எந்த உதவியாளரும் இல்லை.


கடவுளின் விஷயத்தில் எல்லா மக்களும் தங்கள் விருப்பங்களை புகுத்துகின்றனர். ஒரே கடவுளின் அரசாங்கம் வெவ்வேறு கடவுள்களுக்கு பிரிக்கப்பட்டுவிட்டதாக கருதுகிறார்கள், பின் மக்கள் தங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குவதாகவும் ஆதரிப்பதாகவும் நினைத்தார்கள். இதோடு மட்டும் நிற்கவில்லை; பின்னர் அவர்கள் மற்ற பிரிவுகளுக்கு (பிற கடவுள்களை வணங்குபவர்களுக்கு) எதிர்ப்பும் இழப்பும் ஏற்படுத்தத் தொடங்கினர். இது தான் இன்றைய பலதெய்வ அமைப்பின் நம்பிக்கை. இதனால் ஒரு உண்மையான கடவுள் பல பிளவுகளாக பிளக்கப்பட்டது மட்டுமன்றி, ஒவ்வொரு பரம்பரையும், கிராமமும், வட்டாரமும் தங்களுக்கான தனித்தனி கடவுள் மற்றும் வழிபாடுகள் என பிரிந்துவிட்டனர். 


ஒரே கடவுள் பல்வேறு கடவுள்களாக பிரிக்கப்பட்டார். இந்த ஒவ்வொரு கடவுள்களுக்கும் தனித்தனியான உருவங்களும் குணங்களும் இருப்பதாக கருதப்பட்டது. அந்த கடவுள்கள், தங்களை வணங்காதவர்கள் மற்றும் பிற கடவுள்களை வணங்குபவர்கள் மீது கோபம் கொள்ளும் குணங்கள் இருப்பதாகவும், இந்த கடவுள்கள், தங்களை வணங்காதவர்களுக்கு துன்பங்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் ஆரம்பித்தது.


பலகடவுள் கொள்கையின் ஆரம்ப காலத்தில் மூன்று கடவுள்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் :  பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் அவர்களின் மனைவிகளான சரஸ்வதி, லக்ஷ்மி, காளி. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கடவுள் உருவாக ஆரம்பித்தார்கள். பின் கடவுள்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா அளவில் உயர்ந்தது. அந்த கடவுள்களுக்கு மாறுபட்ட மற்றும் ஆச்சரியமான கருத்துக்கள் பல இட்டுக்கட்டப்பட்டன. அவற்றுள் சிலர் சைவம் என்றும், சிலர் அசைவம் என்றும், சிலர் சீறும் கோபமானவர்கள் என்றும், சிலர் அமைதியானவர் என்றும் பிளவுபட்டார்கள். சில நேரங்களில் பேய்கள் மற்றும் இறந்தவர்களும் கடவுள்களாக கருதப்பட்டனர். அதனால், கடவுள்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்தது. இந்த வகையில், பின்தங்கிய வகுப்பு மக்கள், அவர்களின் கடவுளை மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கினர். இந்த கடவுள்களின் கோபத்தினால்தான் உடல் மற்றும் மன நோய்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்பட்டது. அத்தகைய அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிப்பது 'ஓஜா' (மத மருத்துவர்கள்) மற்றும் அவரது லஞ்சக் கட்டணம் வேறு. பெரும்பாலும், இந்த சிகிச்சையில், உணவு பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. முக்கியமாக, விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடப்பட்டது. அவை பிரசாதமாக கொடுக்கப்பட்டன.


புதிதாக மருமகள் வந்தாலும்  குழந்தை பிறந்தாலும் , அவரவர் தங்களின் 'குலதெய்வத்தை' (ஒரு குடும்பத்திற்கான குறிப்பிட்ட கடவுள்) சென்று பார்ப்பது கட்டாயமாக்கப்பட்டது. இது பின்தங்கிய மக்களின் வழக்கமாக கருதப்பட்டது. உயர் வகுப்பு மக்களின் கடவுள்கள் சமுதாயத்தில் மிகவும் மதிப்புமிக்கதாகவும் மற்றும் கௌரவமானதாகவும் பார்க்கப்பட்டது. இந்த உயர்ந்த கடவுள்களின் வழிபாட்டாளராக மாறுவதில்தான் தங்களின்

கௌரவம் இருக்கிறது என்று செல்வந்தர்கள் நினைத்தார்கள். பண்டிதர்கள், புரோகிதர்கள் இந்த உயர்தர கடவுள்களுக்கான வழிபாடுகளை செய்வார்கள். புதிது புதிதாக சடங்குகள்:துர்கா சப்தாஷதி பாத், சிவ மஹிமா, ருட்ரி பாத், ஹவன், பூஜை  போன்றவை உருவாக்கப்பட்டன. பலதெய்வ கொள்கையுடன், பல கதைகள் மற்றும் புனைவுகள் இணைக்கப்பட்டன. அதனால் இந்த கடவுள்களை வணங்குவதன் பயனையும், இந்த கடவுள்களால் (அவர்களை வணங்காவிட்டால்)ஏற்படும் கோபத்தையும் மக்கள் புரிந்து கொள்ள முடியும் என்று நம்பினர். பண்டிகைகளில் இன்னும் ஏராளமான கடவுள்கள் இணைக்கப்பட்டன. பின் இந்த கடவுள்களின் ஸ்தலங்களை நேரில் பார்ப்பது கட்டாயமாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட பழைய கடவுள்களில் சில நீடித்தன,பல மறதிக்குள் உள்ளாக்கப்பட்டன. மேலும் பல புதிய கடவுள்கள் நடைமுறைக்கு வந்து பிரபலமடைந்தன.


பகுத்தறிவு மற்றும் தக்க காரணங்கள் அடிப்படையில் சிந்தித்து பார்த்தால், கடவுள் ஒருவர் தான் என்பது மறுக்கமுடியாத ஒன்றாகிறது. அவரது இருப்பு, பண்புகள் மற்றும் சட்டங்கள் வெவ்வேறு பிரிவுகளின் விருப்பப்படி இருக்க முடியாது. அவரவர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள் என்பது அவரவர்களின் தனிப்பட்ட கருத்து.


சர்வ வல்லமையுள்ள சக்தி உருவமற்றதாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு வடிவம் கொண்டவர் ஏதோ ஒரு நாட்டின் எல்லைக்குள் உட்பட்டவர், மேலும் அவர் வரையறுக்கப்பட்டவர். இது வேதத்தில் "நா தஸ்யா பிரதிமா அஸ்தி" என்று கூறப்படுகிறது (யஜுர்வேதம் 32.3). அதாவது: அவருக்கென்று எந்த வடிவமோ இல்லை. ஒரு இடத்தில் "ஏகம் சத்விப்ரா பஹுதா வதந்தி (ரிக்வேதம் 1: 164: 46)" என்று கூறப்படுகிறது, அதாவது அறிஞர்கள் ஒரே கடவுளை பல பெயர்களால் அழைத்தனர். இறுதியில் - மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் பரிந்துரைக்கப்படும் முடிவு எதுவெனில் , இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அந்த தவறான கடவுள்களிடமிருந்து விலகி ஒரே கடவுளின் பக்கம் திரும்புவதே சரியானதாக இருக்கும்."


---- பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யா,

அகந்த ஜோதி, ஜூன் 1985.


***************************************************************
Source: Hindi to English translation of the below content.
****************************************************************

Comments