நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்திடுங்கள் – குர்ஆன் 41:34 : இது ஷிர்க் மற்றும் குஃப்ரைக் கொண்டாடுவதை நியாயப்படுத்துகிறதா?

 நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்திடுங்கள் – குர்ஆன் 41:34 :

இது ஷிர்க் மற்றும் குஃப்ரைக் கொண்டாடுவதை நியாயப்படுத்துகிறதா?

 -------------------------------------------------

 A. அறிமுகம்

 ஒரு சில முஸ்லிம்கள் ஷிர்க் மற்றும் குஃப்ர் பண்டிகைகளில் கலந்து கொண்டு கொண்டாடுவதை பார்க்கிறோம்.  பெரும்பாலான நேரங்களில், இந்த திருவிழாக்கள் குருட்டு நம்பிக்கை மற்றும் புராண பாத்திரங்கள் மீதான நம்பிக்கையை ஊக்குவிக்கின்றன.  பொதுவாக, இந்த பண்டிகைகள் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவையே.  ஒரு முஃமினாக, நாம் அதிலிருந்து விலகி நடுநிலையாக இருக்க வேண்டும்.  ஷிர்க், குஃப்ர் மற்றும் குருட்டு நம்பிக்கையை நாம் ஊக்குவிக்க முடியாது.  ஏனெனில் இவை இறுதியில் குழப்பமான சமூகத்திற்கு இட்டுச் செல்கின்றன.


துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில முஸ்லிம்கள் இத்தகைய பண்டிகைகளை கொண்டாடுவதைப் பார்க்கிறோம். அது தீன் (இஸ்லாமிய வாழ்வுறை) பற்றிய அறிவு இல்லாததால் இருக்கலாம்.  தயவு செய்து கவனிக்கவும் - நாங்கள் இந்த விழாக்களுக்கு 'வாழ்த்துக்கள்' சொல்வதைப் பற்றி பேசவில்லை, இதுபோன்ற நிகழ்வுகளை கொண்டாடுவது அல்லது விளம்பரப்படுத்துவது பற்றி பேசுகிறோம்.  நீங்கள் அத்தகைய கொண்டாட்டங்களில் சேரும்போது, ​​அத்தகைய கொண்டாட்டங்களுக்குப் பின்னால் உள்ள நம்பிக்கைக்கு மறைமுகமான ஒப்புதல் அளிக்கிறீர்கள்.


 இந்த முஸ்லீம்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்த குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தைக் குறிப்பிடுகின்றனர்.  அவர்கள் தங்கள் செயல்களை நிரூபிக்க குர்ஆன் 41:34 ஐ மேற்கோள் காட்டுகிறார்கள்.  இந்த வசனத்திலிருந்து அவர்கள் விளங்கியது என்னவென்றால், குர்ஆன் அத்தகைய இஸ்லாதிற்கு தொடர்பில்லாத செயலில் பங்கேற்கச் சொல்கிறது, இதனால் உங்கள் எதிரி உங்கள் நண்பராக மாறலாம்.


 அவர்கள் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், குர்ஆன் அத்தகைய விழாக்களில் பங்கேற்பதை ஊக்குவிக்கிறது என்று அவர்களின் மனம் நம்பவைக்கப்பட்டுள்ளது.


 B. குர்ஆன் 41:34 கூறுகிறது

 நன்மையும் தீமையும் சமமானவை அல்ல என்பதை இந்த வசனம் தெளிவாகச் சொல்கிறது, அதாவது நல்லது எது கெட்டது எது என்பதை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.  நீங்கள் அவைகளை ஒன்றிணைக்க முடியாது.


 பிறகு, ஆதாரமற்ற விஷயத்தைத் தவிர்க்க (அ) எதிர்கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் கூறுகிறது.  இது போன்ற அடிப்படையற்ற செயல்களில் நாம் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் (அ) ஊக்குவிக்க வேண்டும் என்பதை இது எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.  நீங்கள் உண்மையைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க முயற்சிக்க வேண்டும் அது முடியாவிட்டால் அமைதியாக இருக்க வேண்டும், ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் இதனை ஊக்குவிப்பாளராக இருக்க முடியாது.


 தவறான விஷயங்களைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது எப்படி?  நிச்சயமாக, இஸ்லாமிய வழியில் முடியும் .  குர்ஆன் 'ஹஸன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது, அதாவது 'நடுநிலை மற்றும் சிறந்த வழியில்' அதை செய்ய வேண்டும்.


 கோபப்படுத்தல் சரியான பதிலாக ஆகாது.

 உங்களை ஒரு வரம்பு மீறிய குற்றத்திற்கு ஆளாக்கும் விதத்தில் நீங்கள் பதிலளித்தல் கூடாது.

 'பழிக்குப் பழி' என்ற வகையில் நீங்கள் நடந்து கொள்ளவும் கூடாது.

 குழப்பதை (அ) ஒழுங்கீனத்தை நாடவும் வேண்டாம்.

 குர்ஆனில் இருந்து நான் மேற்கோள் காட்டக்கூடிய சிறந்த உதாரணம் எதுவெனில் வசனம் 6:108 ல் அல்லாஹ் கூறுகிறான், யாரேனும் அல்லாஹ்வை திட்டினாலும், மற்றவர்கள் வணங்கும் கடவுள்களை நீங்கள் தவறாகத் திட்டக்கூடாது.  குர்ஆன் 41:34 ல் கூறப்பட்ட ஹஸன் வழியின் நடைமுறைச் செயலாக்கம் 6:108 இல் விவரிக்கப்பட்டுள்ளது.


 நாம் சண்டையிட / மோத வேண்டியதில்லை.  நட்பாக நடந்து கொள்ள வேண்டும்.  அவர்களுக்காக நாம் துஆ செய்ய வேண்டும்.  ஒருவேளை அவர்களும் எதிர்காலத்தில் நட்பாக மாறுவார்கள்.


 இந்த வசனதிற்கு சற்று முன், குர்ஆன் ஹஸன் வழியில் மக்களை தீன் (இஸ்லாமிய வாழ்வுமுறை ) நோக்கி அழைப்பது பற்றி பேசுகிறது என்பதையும் நினைவில் கொள்க.


 எனவே, குர்ஆன் 41:34ஐ முந்தைய வசனத்துடன் இணைத்தால், அறியாமையில் இருக்கும் மக்களை தீனை நோக்கி அழைப்பதே தவிர, அவர்களின் நம்பிக்கையில் இணைவது பற்றி அந்த வசனம் பேசவில்லை என்பது விளங்கும்.


 C. முடிவுரை

 குர்ஆன் வழங்கிய துல்லியமான நடுநிலையைப் புரிந்துகொள்வதே இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதாகும்.

 நேர்மறை மற்றும் நடுநிலையான முறையில் அவர்களை நேர்வழிக்கு அழைப்பது மற்றும் நட்பான முறையில் நடந்துகொள்வதே நாம் பேண வேண்டியது.

அதை விடுத்து அல்லாஹ் இந்த வசனதில் ,  உங்களை எந்த ஒரு அடிப்படை ஆதாரமுமற்ற பாதையில் சேரும்படி ஒருபோதும் கூறவில்லை.

Comments