Posts

நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்திடுங்கள் – குர்ஆன் 41:34 : இது ஷிர்க் மற்றும் குஃப்ரைக் கொண்டாடுவதை நியாயப்படுத்துகிறதா?

  நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்திடுங்கள் – குர்ஆன் 41:34 : இது ஷிர்க் மற்றும் குஃப்ரைக் கொண்டாடுவதை நியாயப்படுத்துகிறதா?  -------------------------------------------------   A. அறிமுகம்  ஒரு சில முஸ்லிம்கள் ஷிர்க் மற்றும் குஃப்ர் பண்டிகைகளில் கலந்து கொண்டு கொண்டாடுவதை பார்க்கிறோம்.  பெரும்பாலான நேரங்களில், இந்த திருவிழாக்கள் குருட்டு நம்பிக்கை மற்றும் புராண பாத்திரங்கள் மீதான நம்பிக்கையை ஊக்குவிக்கின்றன.  பொதுவாக, இந்த பண்டிகைகள் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவையே.  ஒரு முஃமினாக, நாம் அதிலிருந்து விலகி நடுநிலையாக இருக்க வேண்டும்.  ஷிர்க், குஃப்ர் மற்றும் குருட்டு நம்பிக்கையை நாம் ஊக்குவிக்க முடியாது.  ஏனெனில் இவை இறுதியில் குழப்பமான சமூகத்திற்கு இட்டுச் செல்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில முஸ்லிம்கள் இத்தகைய பண்டிகைகளை கொண்டாடுவதைப் பார்க்கிறோம். அது தீன் (இஸ்லாமிய வாழ்வுறை) பற்றிய அறிவு இல்லாததால் இருக்கலாம்.  தயவு செய்து கவனிக்கவும் - நாங்கள் இந்த விழாக்களுக்கு 'வாழ்த்துக்கள்' சொல்வதைப் பற்றி பேசவில்லை, இதுபோன்ற நிகழ்வுகளை கொண்டாடுவது அல்லது விளம்பரப்படுத்துவது பற்றி

இஸ்லாத்தின் பார்வையில் போர்

 இஸ்லாத்தின் பார்வையில் போர் அப்பா தன் மகனிடம் “ஆல்பர்ட்!  விளையாடுவதற்குச் செல்ல வேண்டாம்.  வெளியே மழை பெய்கிறது. ”  ஆல்பர்ட்டின் அப்பா “விளையாடுவதற்கு வெளியே செல்ல வேண்டாம்” என்று கூறியதால், ஆல்பர்ட் எப்போதும் எந்த விளையாட்டையும் விளையாடக்கூடாது. சரிதானே?  வாசகர்களே, எனது தவறான முடிவின் காரணமாக தயவுசெய்து என் மீது கோபப்பட வேண்டாம்.  முழுமையான பின்னணியையும், சூழ்நிலையையும் விளங்காமல் நான் மேற்கோள் காட்டுகிறேன் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டீர்கள். சரியான கருத்து எதுவெனில் - “ஆல்பர்ட்டின் தந்தை மழையில்தான் விளையாட வேண்டாம் என்று கேட்டுள்ளார். ஏனெனில் ஆல்பர்ட்டுக்கு காய்ச்சல் வரக்கூடும்.  சாதாரண நாட்களில் அவர் விளையாடலாம். ” இஸ்லாம் பயங்கரவாதத்தை அல்லது வன்முறையை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்படுவது, மேற்சொன்ன கருத்துடன் சற்றே ஒத்திருக்கிறது. திறந்த மனதுடன் இந்த விஷயத்தைப் பார்ப்போம். அ. இஸ்லாம் என்றால் அமைதி  இஸ்லாம் என்பது கடவுளின் மார்க்கத்தை குறிக்க பயன்படும் அரபுமொழிப் பெயர்.  சர்வவல்லமையுள்ள கடவுள் பல வேதங்களின் மூலம் மனிதனை வழிநடத்தியுள்ளார்.  இந்த தொடரில் குர்ஆன் கடைசியாக இ

பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யாவின் பார்வையில் கடவுள்

Image
 பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யாவின் பார்வையில் கடவுள் " கடவுள் ஒருவரே; பல கடவுள்கள் இல்லை" பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யா [இந்து மதத்தின் ஒரு பெரிய அதிகாரம் பெற்றவர் மற்றும் காயத்ரி பரிவார் நிறுவனர்] பண்டிட் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சார்யா [இறப்பு :1990] சனாதன்-தர்மி மற்றும் இந்து வேத அறிஞர்களில் சிறந்து விளங்கியவர். ஹரித்வாரைச் சேர்ந்த ஒரு மதச் சார்பு நிறுவனமான காயத்ரி பரிவார் அமைப்பின் நிறுவனர். அவரின் படைப்பான அகந்த ஜோதி இதழில்(காயத்ரி பரிவாரின் அதிகாரப்பூர்வ இதழ்) சில பதிவுகள்  பின்வருமாறு [ ஜூன் 1985 பதிப்பு] ********* "இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர் ஒருவர் மட்டுமே. அவரே, தனது திட்டங்களின்படி அனைத்து மாறுபாடுகளையும் உருவாக்குகிறார், பெருக்குகிறார், ஏற்படுத்துகிறார். அவருக்கென்று எந்த உதவியாளரும் இல்லை. கடவுளின் விஷயத்தில் எல்லா மக்களும் தங்கள் விருப்பங்களை புகுத்துகின்றனர். ஒரே கடவுளின் அரசாங்கம் வெவ்வேறு கடவுள்களுக்கு பிரிக்கப்பட்டுவிட்டதாக கருதுகிறார்கள், பின் மக்கள் தங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குவதாகவும் ஆதரிப்பதாகவும் நினைத்தார்கள். இதோடு மட்டும் நிற்கவில்லை;

நாம் இறைவனை நேசிக்க வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா?

நாம் இறைவனை நேசிக்க வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா? கேள்வி: நாம் இறைவனை நேசிக்க வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா?  கடவுளுக்கு  நாம் கீழ்ப்படிவதற்கு முதல் காரணமாக  இறைவனை குறித்த பயம் இருக்கிறது என்ற கருத்தை ஏற்கிறீர்களா? ************** பதில்: அரபு சொல் "தக்வா", "பயம்" என்று தவறாக மொழிபெயர்க்கப்படுகிறது. "வாவ் காஃப் யா" என்ற மூல சொல் அன்பைக் குறிக்கிறது. இறைவனை விலங்கு, பேய் அல்லது கெட்ட மனிதர்களை கண்டு அஞ்சுவது போல  அஞ்சக்கூடாது. இறைவனை நேசிக்க வேண்டும். ஒருவரின் மீது அன்பு அதிகரிக்கும் போது ஒரு பயம் உருவாகும், ஆனால் இந்த பயம் அச்சுறுத்தலால் உருவாவதல்ல, அதீத அன்பின் காரணமாக உருவாவது. இந்த அன்பு கலந்த பயம் தான் "தக்வா", இதையே தான் குர்ஆனும் போதிக்கிறது. ".... நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்...." குர்ஆன் 2:165  அதே நேரத்தில், குர்ஆன்  அல்லாஹ்வின் மீது பயத்தினையும் விசுவாசிகளுக்கு வலியுறுத்துகிறது. ஆனால் இந்த பயத்திற்கு பயன்படும் வார்த்தை வேறானது. ஒவ்வொரு அரபுமொழி வார்த்தைகளும் ஒவ்வொரு அர்த்தத்தினை க

மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை இல்லையெனில் மனிதநேயம் இருக்குமா?

மரணத்திற்குப்  பின்னுள்ள வாழ்க்கை இல்லையெனில் மனிதநேயம் இருக்குமா? நான் மனிதநேயத்தைதான் நம்புகிறேன், மதத்தினை அல்ல. ******************************* அ. மறுமை வாழ்க்கை (பரலோகம்) மேல்  நம்பிக்கை வைக்காமல் மனிதநேயம் சாத்தியமாகுமா?  நான் மனிதநேயத்தை நம்பக்கூடியவன். எதுக்கு தேவை இல்லாத நம்பிக்கைகள்? முதலில் நல்ல மனிதனாயிருப்போம், மற்றவைகளை அப்புறம் பார்க்கலாம். சொர்க்கம், நரகத்தை பார்த்தவர் யார்? பின்பு ஏன் அவைகளை நம்ப வேண்டும்? மறுமை வாழ்வு/நம்பிக்கைகள்/கடவுள் போன்ற விஷயங்கள் பேச முயலும்போது,  மேல் சொன்ன கேள்விகளை நம்மால் அடிக்கடி கேட்க முடியும். நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை விளக்குவோர் அதன் உண்மைத் தன்மையை உணர வைப்பதில்லை. அதனால் தான் இதுபோன்ற கேள்விகள் பிறக்கின்றன. பகுத்தறிவுள்ளவர்கள், இயற்கையையோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றையோ கடவுளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "நான் மனிதநேயத்தை நம்புகிறேன்" -  இங்கே மனிதநேயம் என்பது எதைக் குறிக்கிறது? எது மனிதாபிமானம், எது மனிதாபிமானமற்ற தன்மை என்பதனை யார் முடிவு செய்கிறார்? அறநெறி, நல்லொழுக்கம் மற்றும் ஒழு

நான் அறிவியலை நம்புகிறேன். எனக்கு ஏன் ஒரு மதமோ அல்லது கடவுளோ தேவை?

நான் அறிவியலை நம்புகிறேன். எனக்கு ஏன் ஒரு மதமோ அல்லது கடவுளோ தேவை? ********* அறிவியல் அல்லது விஞ்ஞானம் என்பதே கடவுளின் சட்டங்களை கண்டுபிடிப்பதுதான். இந்த இயற்கையின் விதிகள் எந்நிலையிலும் மாறாது. இந்தச் சட்டங்களைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாக சிந்திக்கிறோமோ அந்த அளவுக்கு மனிதகுலத்திற்காக சிறந்த விஷயங்களை நம்மால் கொண்டு வரமுடியும். நமது அன்றாட வாழ்க்கையில் அறிவியல் பெரிதும் பயன்படுகிறது. நமது அலாரம் கடிகாரம் முதல் சுகாதார மருந்துகள் வரை - அனைத்தும் அறிவியலயே சார்ந்துள்ளது. அதே நேரத்தில், அறிவியலுக்கும் வரம்புகள் உள்ளன. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அறிவியல் நமக்கு வழிகாட்டும் என்று எதிர்பார்ப்பது பெரும் தவறு. அறிவியலால், நம்மை உணர்வு ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு சிறந்த மனிதனாக மாற்ற முடியாது. அறிவியல் நல்லது கெட்டது பற்றியோ, நெறிமுறைகள் மற்றும் சமூக நடத்தை பற்றியோ பேசவதுவில்லை. பெற்றோருக்குக் கீழ்ப்படிவது,  மனைவியை நேசிப்பது,  குழந்தைகளைப் பராமரிப்பது அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவுவது பற்றியும் அறிவியல் பேசாது. அதுபோல், அறிவியல் ஒருவரின் மனசாட்சியை ஈர்க்காது, மற்றொருவ

நமக்கு பயனளிக்கிறது என்பதனால் சூரியனையும் சந்திரனையும் நாம் வணங்கலாமா?

நமக்கு பயனளிக்கிறது என்பதனால் சூரியனையும் சந்திரனையும் நாம் வணங்கலாமா? ************** வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம் வார்த்தைகளும் நடத்தையும் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு மரியாதை, அன்பு, பாசம், சமர்ப்பிப்பித்தல், பாராட்டுதல், போற்றுதல் இப்படி ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் வெவ்வேறு சொற்கள் பயன்படுகின்றன. நீங்கள் உங்களுடைய பெற்றோர்களை நேசிக்கிறீர்கள், மதிக்கிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள். நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரரை அல்லது துணிச்சலான ஒருவரின் செயலைப் பாராட்டலாம். ஆனால், அவர்களால் உங்கள் பெற்றோருடைய இடத்திற்கு வர முடியாது. உங்கள் பெற்றோரை நீங்கள் நேசிக்கும் விதத்தில் அவர்களை நேசிக்க முடியாது. நீங்கள் உங்களுடைய மனைவியை நேசிப்பது போல உங்கள் அண்டை வீட்டாரை நேசிப்பதில்லை. நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள். கடவுளின் வழிகாட்டுதலின்படிதான் உங்கள் முழு வாழ்க்கையும் இயக்கப்பட வேண்டும். கடவுளின் இடத்தில் வேறு ஒருவரை வைக்க முடியாது. நீங்கள் விலங்குகளிடம் பாசத்தைக் காட்டுகிறீர்கள், இந்த பாசம் உங்கள் பிள்ளைக்கு காட்டுவது போன்றதல்ல. சூரியன், சந்திரன், வானம், பூமி, அதில்